வெளிநாட்டிற்கு வேலை சென்ற மனைவி..! இங்கு குடும்பத்தில் நேர்ந்த சோகம்..! போலீஸ் விசாரணை..!
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பணகுடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (41). கொத்தனாராக வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும் ராபின்(14) என்ற மகனும், காவ்யா என்ற (11) மகளும் உள்ளனர்.
மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்த ரமேஷ் நிறைய கடன் பிரச்சனையில் தவித்து வந்துள்ளார். இதன்காரணமாக தனது மனைவியை 10 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் தனது இரு பிள்ளைகளை கவனித்து வந்த ரமேஷ் மனைவியை விட்டு பிரிந்த சோகமும் கடன் வாங்கியவர்களிடம் அக்கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழலிலும் தவித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் அதே விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே இருந்தவர்கள் நேற்று முழுக்க வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது மூன்று பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்த கிடந்துள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பணகுடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் உறவினர் என அனைவரிடமும் விசாரணை திவீர நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த தற்கொலைக்கு மனைவியை பிரிந்த சோகம் மற்றும் வறுமையின் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்