“மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்” முதலைமைச்சர் ஸ்டாலின்..!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இன்று தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பின் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
முதலமைச்சர் ஸ்டாலின், ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்யும் விதமாக தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தினை தொடங்கி வைத்து பின் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
தருமபுரி மாவட்டத்தில் இந்த திட்டம் தொடங்கி 04.09.2024 வரை நடைபெற உள்ளது. அதற்காக மாவட்டம் முழுவதும் 70 முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரிடம் முகாம்களில் எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட 15 அரசுத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் 44 அரசு திட்டங்களின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை முகாம்களில் பொதுமக்கள் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, உயர்கல்வித்துறை, பால்வளத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சித்துறை, ஊராட்சித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை, பேரூராட்சிகள் துறை, வனத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை துவங்கி வைக்கவுள்ளார்.
மற்றும் கூட்டுறவுத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்ட கலைத்துறை, மகளிர் திட்டம், மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலாளர்கள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, வருவாய் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதனை தொடர்ந்து, மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்காக தற்போது செயல்பட்டு வரும் பேருந்துகளுக்குப் பதிலாக 20 புதிய நகர பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..