பிஎஸ்பி கட்சியின் புதிய மாநில தலைவராக பொற்கொடி நியமனம் செய்யாதது ஏன்..? வெளியான உண்மை காரணம்..!
கடந்த ஜூலை 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 16பேர் கைது செய்யப்பட்டனர். அதில், ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப் பட்ட நிலையில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நியமிக்க வேண்டும் என அக்கட்சியினர் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை கட்சி மேலிடம் பரிசீலனை செய்து இதுபற்றி பொற்கொடியிடம் கேட்டுள்ளனர்.
ஆனால் அவர் கட்சியின் தலைவராக இருக்க விரும்ப வில்லை எனக் கூறியுள்ளார்.., அதனையடுத்து, கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி ஆலோசனை செய்தார். இறுதியாக, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தன், துணைத் தலைவராக டி.இளமான் சேகர், பொருளாளராக கமலவேல் செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு பெரம்பூரில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த், கோபிநாத் ஆகியோர் மாநில ஒருங்கிணைப்பாளர், தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் நியமனத்தை அறிவித்தனர். மீதமுள்ள மாநில நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..