“என் Friend போல யாரு மச்சான்..” தனது நண்பரின் பட டீசர் பார்த்து.. அஜித் சொன்னது.. “
மங்காத்தா படத்தின் மூலம், இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் அஜித்தும் கூட்டணி வைத்தனர். இந்த திரைப்படம், அஜித்தின் கரியரிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது, இயக்குநர் வெங்கட் பிரபு, விஜயுடன், தி கோட் என்ற படத்தில், நடித்து முடித்துள்ளார்.
இப்படம், வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி, ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் டீசர், நேற்று ரிலீஸ் ஆனது. இதனைத் தொடர்ந்த, இயக்குநர் வெங்கட் பிரபு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி கோட் டிரைலர் குறித்து, அஜித் என்ன சென்னார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “அஜித் சார்.. கோட் படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு டேய் சூப்பரா இருக்கு டா. உனக்கும், விஜய்க்கும் நல்லா செட் ஆகியிருக்கிறது. விஜய்க்கும், படக்குழுவுக்கும் என்னோட வாழ்த்துகள் சொல்லிரு டா-னு மெசேஜ் பண்ணாரு” என்று கூறினார்.
-பவானி கார்த்திக்