தோழிகளுடன் பப்புக்கு சென்ற இளைஞர்.. நடனம் ஆடிய போது நேர்ந்த சோகம்..
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தவர் முகமது சுகைல். இவர், தனது பெண் தோழிகளுடன், அப்பகுதியில் உள்ள பப்புக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஆட்டம்போட்டுக் கொண்டு இருந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுகைலின் நண்பர்கள், மருத்துவமனைக்கு, அவரை அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். முன்பு, 60 வயதை தாண்டிவர்களுக்கு தான், பெரும்பாலும் மாரடைப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால், தற்போது, சிறுவயதினர் முதல் முதியோர் வரை, அனைத்து தரப்பு மக்களுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது.
இதனால், அனைவரும், உடற்பயிற்சி செய்து, சீரான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
-பவானி கார்த்திக்