உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பொறுப்பேற்றுள்ளார். கடந்த மே 24, 2019 தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி கவாய், கடந்த 2007 முதல் 2010 ம் ஆண்டு வரை இந்தப் பதவியை வகித்த நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, இந்தியாவின் இரண்டாவது தலித் தலைமை நீதிபதி ஆவார். எனினும், அவரது பதவிக்காலம் மே 14 முதல் நவம்பர் 23, 2025 வரை ஆறு மாதங்கள் மட்டுமே நீடிக்கும்.
இவருக்கு பிறகு, நீதிபதி நாகரத்னா சீனியாரிட்டி அடிப்படையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆவார். இவரது பதவிக்காலம் வெறும் 36 நாட்கள் மட்டுமே இருக்கும். உச்சநீதிமன்றத்தில் 11 பெண்கள் மட்டுமே நீதிபதியாக பணியாற்றியுள்ளனர். அதில்,ஒருவர் கூட 75 ஆண்டு காலத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியதில்லை. நீதிபதி நாக ரத்தினாதான் அந்த பெருமையை பெறவுள்ளார்.
இவருக்கு முன்னதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர பிரசாத் 29 நாட்களும் கமல் நரைன் சிங் வெறும் 17 நாட்கள் தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளனர். நீதிபதி சந்திரசூட் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 7 ஆண்டுகள் 139 நாட்களும் பணியாற்றியுள்ளார். இவர்தான், உச்சநீதிமன்றத்தில் அதிக நாட்களாக தலைமை நீதிபதியாக இருந்தவர்.
உச்சநீதிமன்றத்தில் 52 ஆண்கள் தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளனர். முதன்முறையாக நாகரத்தினா பெண் தலைமை நீதிபதியாக அடுத்து பதவிக்கு வருவார்.