இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் அமேசான் காட்டுக்குள் இருப்பது போன்றே அடர்ந்த காட்டுக்குள் மைதானம் ஒன்று பிட்ச்சுடன் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கின்றனர். பார்த்தாவ் அவ்வளவு அழகாக இருக்கிறது. சரி… இந்த கிரிக்கெட் மைதானம் எங்கேதான் இருக்கிறது என்று பார்த்தால், கேரள மாநிலம் திருசூச்சூர் அருகேயுள்ள பாலப்பள்ளி என்ற இடத்தில்தான் உள்ளது.
சாலக்குடி வனச்சரகத்துக்குட்பட்ட ஒரு எஸ்டேட்டுக்குள் இந்த மைதானம் உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள் இருந்தாலும், இங்கு சென்று யார் வேண்டுமானாலும் கிரிக்கெட் விளையாடலாம்.
இந்த மைதானத்தை நிர்வகித்து வரும் ஜலீல் என்பவர் கூறுகையில், இங்கு எந்த அணிகள் வேண்டுமானாலும் கிரிக்கெட் விளையாடலாம். நாங்களே கூட எதிர் அணியை தயார் செய்து தருவோம். பெரிய டோர்னாமென்ட் கூட நடத்தலாம். அடிக்கடி யானைகள் வரும். இதனால், காட்டுக்குள் தேவையில்லாமல் போகக் கூடாது. மற்றபடி, இங்கே வந்து விளையாட யாருக்கும் தடை இல்லை என்கிறார்.