மின்கம்பங்கள் தொடர்ந்து சேதமடைவதால் கனரக வாகனங்கள் செல்ல புறவழிச்சாலை அமைத்து தரக்கோரி மக்கள் கோரிக்கை
சோளிங்கரில் மின்கம்பிகள் சேதமடைந்து அப்பகுதிக்குள் வாகன ஓட்டிகள் செல்ல அச்சமடைவதால், புறவழி சாலைகள் அமைத்து தரும்படி அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பாட்டிக்குளம் பகுதியில் கரும்பு லாரி ஒன்று அப்பகுதியை கடக்கும்போது மின்கம்பிகள் கரும்பில் சிக்கி அருந்து விழுந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மின்சார துறைக்கு தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மின் பணியாளர்கள் மின்சாரத்தை துண்டித்து மீண்டும் மின்கம்பிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த பகுதியில் மின்கம்பங்கள் தொடர்ந்து சேதமடைவதால் கனரகங்கள் வாகனங்கள் செல்ல புறவழிச்சாலைகளை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.