தமிழ்நாடு என்ன சரணாலாயமா..? சீசனுக்கு மட்டும் வர..!! மோடியை விளாசியா ஸ்டாலின்..!!
தமிழ்நாட்டில் தேர்தல் களம் எந்த அளவிற்கு சூடு பிடித்துள்ளதோ அதே அளவிற்கு அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் மதுரையில் இன்று இரவு மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு ஆதரவாக பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பிரசாரம் மேற்கொண்டார்.
மதுரை பிரச்சாரம் :
அப்போது பேசிய அவர், மோடி நம் நாட்டிற்காக செய்தது என்ன..? ஒருதாய் மக்களாக வாழும் நம் மண்ணில் மதவெறியை விதைத்து பிளவு ஏற்படுத்தி, அந்த மக்களுக்கு ஆதரவாக பேசுகிறவர்களைச் சிறையில் அடைத்து வேடிக்கை பார்த்தார்.
மேலும் எழுத்தாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி கொல்லப்பட்டதை மௌனமாக வேடிக்கை பார்த்தார். மதவெறியர்களின், வன்முறையையும் கொலைகளையும் தாராளமயமாக்கினார்.
இப்படிப்பட்டவரை, தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது இந்த ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி அவருக்குத் தெரிந்துவிடும்.
மோடியின் பொய் பட்டியல் :
இதுவரைக்கும் அவர் தமிழ்நாட்டிற்கு செய்தது எல்லாம், பணம் மாற்றம், ஜிஎஸ்டி, ஊரடங்கில் பணம் கொள்ளையடித்தல் என அடுக்கி கொண்டே போகலாம்.
ஆனால் இப்போ புதிதாக அவர் சொல்லுவது என்னவென்றால்..? நம் திமுக தான் வளர்ச்சித் திட்டங்களைத் தடுத்தோமாம்.., இதை தான் பெரியவர்கள் “அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு” – என சொல்லுவார்கள்.
அதற்கு எற்றார் போல பிஜேபியும் செல்லும் இடம் எல்லாம் இந்த பொய்யை தான் சொல்லி வருகிறார்கள். பாஜக தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு அவர்கள் தடுத்த திட்டங்களைப் பட்டியல் போடலாமா..?
சேது சமுத்திர திட்டம் :
தென் மாவட்ட இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டம் வழங்க அன்னை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் இந்த மதுரையில் தொடங்கிய திட்டம் தான் “சேது சமுத்திர திட்டம்” ஆனால் இந்த திட்டத்தை முடக்கி விட்டார்கள்.
எய்ம்ஸ் மருத்துவமனை :
ஏன், பத்தாண்டு காலத்தில் அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டமான “எய்ம்ஸ் மருத்துவமனை” ஏன் கட்டப்படாமல் இருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தார்களே..? இந்த எய்ம்ஸ் உடன் அறிவித்த, மற்ற பாஜக. ஆளும் மாநில எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாம், பயன்பாட்டிற்கு வந்துவிட்டதே. ஆனால், மதுரைக்கு எய்ம்ஸ் வரவில்லை.. ஏன் எல்லாம் வாய் சவிடால்.
திமுக நிறைவேற்றிய திட்டம் :
ஆனால் நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள் ஒன்றிய அமைச்சராக இருந்த காலத்தில் மதுரையில் மேம்பாலங்கள், சாலைகள் என்று 56 ஆயிரத்து 644 கோடி ரூபாய்க்குத் தமிழ்நாட்டிற்குத் திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றினோம்.
நெசவுத் தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கப்பட்டது. இன்னும் நிறைய திட்டங்களை நம் திராவிட மாடல் ஆட்சி செய்துள்ளது.
தமிழ்நாடு வரும் மோடி :
ஆனால் பிரதமர் மோடியால் இப்படி அவர் செய்த திட்டங்கள் என்னவென்று பட்டியல் போட முடியுமா..?
தேர்தல் சமயத்தில் மட்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வர தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா..? தமிழர்கள் மேல் மட்டும் அவருக்கு ஏன் இத்தனை வன்மம்..? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா..?
நாங்கள் என்ன இரண்டாம் தரக் குடிமக்களா..? ஏன் இந்த ஓரவஞ்சனை..? எப்படி உங்களால் ஓட்டு கேட்டு தமிழ் நாட்டிற்கு வர முடிகிறது.
நம்மைப் பொறுத்தவரை, திராவிட மாடல் அரசு இந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளைச் செய்துள்ளது.
இனிமேலும் செய்ய உள்ளது. நீங்கள் எனக்கு கொடுத்த முதலமைச்சர் என்ற பெருமிதத்துடனும் உரிமையுடனும் உங்களிடம் கேட்கிறேன்.
கடந்த முறை எங்களை நம்பி வாக்கு கேட்டதை போல இந்த முறையும் வாக்களியுங்கள்.., என இவ்வாறே அவர் பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..