அரசியல் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி செய்த செயல்.. எதிர்த்து நிற்கும் காங்கிரஸ்..!!
அரசு திட்டங்களை விளம்பரப்படுத்த ராணுவத்தை பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி அரசு தனது அரசியல் வளர்ச்சிக்காக, அரசு திட்டங்கள் குறித்த சுவரொட்டிகளை ராணுவத்துக்கு வழங்கியுள்ளது. அரசு திட்டங்கள் தொடர்பான 822 ‘செல்பி மையங்கள்‘ நாடு முழுவதும் அமைக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அரசு திட்டங்களை விளம்பரப்படுத்த ராணுவத்தை பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராணுவ வீரர்கள் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் பிரசாரம் செய்யவுள்ளனரா என கேள்வி எழிப்பியுள்ள காங்கிரஸ் தரப்பு, இதுதொடர்பான உத்தரவை ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவை தங்கள் இணையதளங்களில் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.
Discussion about this post