“தமிழ்நாடு கிராமசபை கூட்டம்” தேதியை வெளியிட்ட தமிழக அரசு..!!
நவம்பர் 1-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமசபை கூட்டம், குடியரசு நாள், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி மற்றும் உள்ளாட்சி நாள் ஆகிய 6 சிறப்பு நாட்களின் போது தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தினத்தன்று அனைத்து கிராம சபைகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இதில், ஊராட்சிகளின் நிதி நிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேரிப்பு. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மற்றும் இதர பொருட்களுடன் விவாதம் நடைபெற உள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..