வியாழக்கிழமை சாய்பாபா விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்..?
சாய்பாபாவை வணங்கும் பக்தர்கள் ஏராளம், அதிலும் வியாழன் கிழமை அன்று அவருக்கு விரதம் இருந்து எப்படி வழிபட வேண்டும், என்பது பற்றியும் அனைவருக்கும் தெரியும். வாரந்தோறும் வியாழன் கிழமை அன்று விரதம் இருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன் பற்றி பார்க்கலாம்.
தொடர்ந்து 9 வியாழக்கிழமை விரதம் இருந்து சாய்பாபா நாமத்தை மனதிற்குள் சொல்லி வழிபட்டால் நீங்கள் நினைக்கும் காரியம் நிச்சயம் நிறைவேறும்.
சாய்பாபா மந்திரம் :
ஓம் சாய் நமோ நமக,
ஸ்ரீ சாய் நமோநமக,
ஜெய் சாய் நமோநமக,
சத்குரு சாய் நமோநமக..
எனும் மந்திரத்தை மனதார சொல்ல வேண்டும். மந்திரத்தை சொல்லும் முன். பூஜை அறையில் ஒரு மஞ்சள் துணியில் சாய்பாபா படம் அல்லது சிலை வைத்து, மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும்.
பின் நெய் தீபம் ஏற்றி, தீப ஆராதனை செய்ய வேண்டும்.., தீப ஆராதனை செய்யும் பொழுது பாபாவிற்கு பிடித்த பிரசாதங்கள் படைத்து வழிபடலாம்.. அதாவது கற்கண்டு, இனிப்பு பலகாரங்கள், அல்லது பழங்கள்..
தொடர்ந்து 9 வாரங்கள் இந்த வழிபாடு செய்தால்.., நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்..
Discussion about this post