கமல்ஹாசன் – விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்த படம்..? உற்சாகத்தில் ரசிகர்கள்..!!
கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். இப்படத்தின் படபிடிப்பு காட்சிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகின்றனர். இந்தியன்2 படத்தை தொடர்ந்து இயக்குனர் சங்கர் தயாரிப்பில் கேஎச்234 படத்தில் நடிக்க உள்ளார்.
இதனிடையே இயக்குனர் எச்.வினோத் கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த கதையில் சில திருத்தங்கள் இருப்பதால் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க போவதாகவும் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி நடிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்குமுன் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த விக்ரம் படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படமும் வெற்றி பெரும் என்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. சில நெட்டிஸைன்கள் பல மீம்ஸ் களும் க்ரியேட் செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.. அதுவும் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
Discussion about this post