செந்தில் பாலாஜி உடல் நிலை என்ன..? மருத்துவர்கள் கூறுவது..?
நேற்று முன்தினம் இரவு அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி.., மாரடைப்பு காரணமாக ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரின் இதய ரத்த நாளத்தில் வலது புறத்தில் 90 சதவிகித அடைப்பும், இடது புறத்தில் 80 சதவிகித அடைப்பும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது அவர் உடல் நலம் பெற்று இருப்பதாகவும் , ஓமந்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அவரின் உடல் நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து பேசிவருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post