மாணவியிடம் ஆசிரியர் ஆபாச பேச்சு..!! தர்ம அடி கொடுத்த மாணவர்கள்..!! வைரலாகும் வீடியோ..!!
மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி வீட்டுக்கு அழைத்த ஆசிரியரை சகமாணவர்கள் தாக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர் தான் தனக்கரசு இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இன்னும் சில மாதங்களில் பணி நிரந்தரம் (Permanent Staff ) செய்யப்பட உள்ள நிலையில், இவரின் இந்த செயல் பிற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..
இப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்துள்ளார்., இதனால் அந்த மாணவியின் அட்டெனென்ஸ் மதிப்பு குறைந்து மாற்றுச் சான்றிதழ் கொடுத்து பள்ளியில் இருந்து விடுவிக்கும் நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 12ம் தேதிக்கு முன்பு தனக்கரசு மதுபோதையில் அந்த மாணவியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதுடன் பாலியல் தூண்டலில் ஈடுபட்டு தனது வீட்டிற்கு வந்து தன்னோடு இருக்கும் படி பேசியுள்ளார்..
இதில் மனமுடைந்த அந்த மாணவி தனது நண்பர்களிடம் இதை பற்றி கூறியுள்ளார்., மேலும் இந்த ஆடியோ இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது., ஆசிரியர் தனக்கரசு மாணவியிடம் பேசிய ஆபாச வார்த்தை சமூக வலைதளத்தில் வைரலாக பரவியுள்ளது..
அதன் பின் அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் உட்பட சில இளைஞர்கள் ஆசிரியர் தனக்கரசுவை, தனியாக அழைத்துச் சென்று, மாணவரிடம் பேசியதை கண்டித்து மண்டியிடச் செய்து ஆபாசமாக திட்டி தர்மஅடி கொடுத்து தாக்கியுள்ளனர்..
ஆசிரியரை தாக்கியதை சில மாணவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் தனக்கரசுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களை இதுபோன்று வன்முறையில் ஈடுபடக்கூடாது எந்த ஒரு பிரச்சனை என்றாலும் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என மாணவர்களை எச்சரித்துள்ளனர்… இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..