சமூத்திரகனியின் நிலத்தில் நடந்த செயல்..! வெளிவந்த பல உண்மைகள்…!
சமுத்திரக்கனி:
திரைப்பட நடிகரும், இயக்குநரான சமுத்திரக்கனி, தனது படங்கள் மூலம் சமூக முன்னேற்றத்திற்கான கருத்துகளை பேசுவதுடன், விவசாயத்தின் மகத்துவத்தையும் பறைசாற்றி வருகிறார்.
பல தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தோன்றியதுடன் தமிழ் படங்களில் முக்கியமாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அவரின் விவசாய நிலத்திலேயே உழவுப் பொருள் திருட்டு போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூத்திரக்கனி நிலத்தில் திருட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் கவுண்டனூர் கிராமத்தில் சமுத்திரக்கனிக்கு சொந்தமான, விவசாய நிலம் உள்ளது. அந்த விளைநிலத்தை அதே பகுதியை சேர்ந்த ராமு(32) என்பவர் பராமரித்து வந்த நிலையில், உழவுப் பணி மேற்கொள்வதற்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பவர் டில்லர் இயந்திரத்தை நடிகர் சமுத்திரக்கனி வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த பவர் டில்லர் இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ராமு, செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரின் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், திருவண்ணாமலை அடுத்த மேல் பாலானந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தான், உழவு இயந்திரத்தை திருடுவதற்கு மூளையாக இருந்தது தெரியவந்தது.
இவர் ஏற்கனவே சமுத்திரக்கனியின் விவசாய நிலத்தில், வேலை செய்தவர் என்பதும் அம்பலமானது. மேலும் இவருடன் இணைந்து இந்த திருட்டில் ஈடுப்பட்ட செல்வகுமார், அருண்குமார், விஜயா என்பதும் தெரியவந்தது. பின்ன்ர் இவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்