1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக ஈரோடு மாவட்டத்தில் பிறந்த தந்தை பெரியார் குறித்து சில சுவாரசிய தகவல்கள்:
1. தாம் வாழும் சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளை எதிர்த்து துணிந்து களம் கண்ட மனிதர் தந்தை பெரியார் ஆவர்.
சமூக இழிவுகளை துடைக்கும் பணியை எந்த விமர்சனம் வந்தாலும் தொடர்ந்து செய்வேன் என கூறியவர். சமூக விடுதலை, அரசியல் விடுதலை என தாம் கொண்ட கொள்கையில் இருத்து விலகாமல் இறுதி வரை போராடியவர்.
2. சுமார் 92 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் விதைத்த விதை சிங்கப்பூர் இனறும் நடைமுறையி்ல் உள்ளது. பெரியார் பங்கேற்ற ஒவ்வொரு கூட்டத்திலும் தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு, பெண் கல்வி, சுயமரியாதை, சமதர்மம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தினார் . மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும், சாதி பாகுபாடு பார்க்க கூடாது, பெண் கல்வி பல கருத்துகள் இன்றும் சிங்கப்பூரில் நடைமுறையி்ல் உள்ளது.
3. மலேசிய, சிங்கப்பூர் மக்களை சந்தித்த பெரியார் பழமைவாதத்துக்கு முடிவு கட்டிவிட்டு புது வாழ்க்கையைத் தொடங்குங்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சரியாகப் பயன்படுத்துங்கள். எக்காரணத்தை கொண்டும் இந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என கூறினார்.
4. இதன் காரணமாக இன்றளவும் பெரியாரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் இன்று சாதி பாகுபாடுகள் இல்லை. இங்கு சாதி சங்கங்களை பதிவு செய்ய இயலாது. சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் என்ற பெயரில் சிங்கப்பூரில் உள்ள தமிழர்களால் தொடங்கி இயங்கி வருகிறது.
5. அதேபோல் சிங்கப்பூர் அரசாங்கம் இன்றளவும் தமிழுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது எனில் அதற்கு பெரியார் கருத்தும் ஒரு காரணம் என கூறபடுகிறது. கல்வி, பொருளாதாரம், பெண் சுதந்திரம் ஆகிய அம்சங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
6. இன்றைய சூலலில் பெண்கள் இருந்தால் கலப்பு திருமணம் செய்கிறார்காள். இதை யாரும் தவறான செயலாகக் கருதவில்லை. தமிழகத்தின் முதல்வராக இருக்கும். மு.க.ஸ்டாலினின் மனைவியும்கூட கோவிலுக்குச் சென்று வழிபடுகிறார். அதை யாரும் தடுக்கவில்லை. சில விஷயத்தில் பெரியாரின் கொள்கைகளை ஏற்க இயலாது. அதே சமயம் கல்வி, பெண்ணியச் சுதந்திரம் குறித்து அவர் முன்வைத்த கருத்துகளை மறுக்கமுடியாது.
7. தமிழகம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் திராவிட மாடல் ஆட்சி அமைத்து இன்று சாதியினரையும் அர்ச்சகராக நியமனம், பெண்களை ஊக்குவிக்கும் உயர்கல்வி அனைத்திற்கும் விதை பெர்யார் போட்டது.
8. கேரளாவில் கோயிலுக்குள் நுழையவும், கோயில் வீதியில் நடக்கவும் தலித் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை எதிர்த்து போரட்டத்தில் ஈடுபட்டவர் தந்தை பெரியார்.
9. இன்றைய சூழலிலும் பெரியாரின் கருத்துகள் நிச்சயம் நாட்டிக்கு தேவை. நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறவில்லை, எல்லாம் ஆக்கப்பூர்வமாக நடக்கவில்லை. இதை உணர்த்த பெரியார் சித்தனை தேவை என முக்கிய தலைவர்கள் கூறுகின்றனர்.
10. நமது தமிழ்ச் சமுதாயத்தில் பரவிக்கிடந்த அநீதிகளை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் சமூக நிதிக்காக போராடிய தந்தை பெரியார் அவரது பிறந்தநாளை சமூக நிதி நாளாகவே இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.