அவனின்றி நான் ஏது – பகுதி – 3
காதலை சொல்லி காத்திருந்த நம்ப ஹீரோ கார்த்திக்கிற்கு., நந்தினியிடம் இருந்து எந்த பதிலும் வர வில்லை .. இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டே சென்றதால் நட்பாக பேச கூட நந்தினி முகநல் பக்கமே வரலையே என்று கார்த்திக் Feel பண்ண., ஒரு தடவை நந்தினியிடம் பேசும் போது அவள் படிக்கும் கல்லூரியின் பெயரை கூறியிருப்பாள்.
அது நினைவிற்கு வந்ததும் உடனே நம்ப கார்த்தி நந்தினியை பார்க்க செல்கிறான். இவ்வளவு நாள் புகைப்படங்கள் மூலமே நந்தினியை பார்த்து காதலித்திருந்த கார்த்தி., முதன் முதலாக அவளை நேரில் பார்க்க போகிறோமே என்ற சந்தோஷத்துடன் நந்தினி படிக்கும் கல்லூரிக்கு செல்கிறான்.
அங்கு காலை கல்லூரி செல்லும் நேரத்தில் சரியாக நின்று கொண்டிருந்தார். ஆனால் நந்தினி வரவில்லை. பின்., மீண்டும் கல்லூரி முடியும் நேரத்தில் அவளை காண படபடப்புடன் அவனை அறியாமலே கண்ணில் சின்னதா ஆனந்த கண்ணீருடன் வாசலை பார்த்து நின்றான். ஆனால் நந்தினி வரவில்லை.
ஒருவேலை முகநூலில் பேசுகிறோம் என்பதால் நந்தினி தன்னிடம் இந்த கல்லூரியில் படிக்கிறேன் என்று பொய் சொல்லி இருப்பாளோ என்று அவனுக்குள் ஒரு சந்தேகம் எழுந்தாலும் மறுபக்கம் அப்படி இருக்காது என்று அவனே அவனுக்கு ஆறுதல் கூறிக்கொண்ட படி நின்றான்.
அப்போது கல்லூரியில் இருந்து வெளியே வந்த ஒரு பெண்ணிடன் நந்தினி குறித்து கேட்கிறான். அவளும் இருங்க நான் கூட்டிட்டு வரனு போறாள். ஆனால் வந்தது நந்தினியை இல்லை அவளது தோழி., பின்னர் தோழி வந்து யாரு நீங்க நந்தினியை எதுக்காக கேட்கிறிங்க என்று கேட்க நான் கார்த்தி. நந்தினியோட காதலன் என்று சொல்ல
தோழி: நீங்க தானா கார்த்தி நந்தினி நிறைய சொல்லி இருக்கானு சொல்ல..,
நம்ம ஹீரோவுக்கு அதெல்லாம் கேட்க நேரமில்லை நந்தினி எங்க நந்தினி எங்கனு கேட்க தோழி சொன்ன பதிலால் ஒரு நொடியில் உலகமே நின்றது போல அங்கேயே கண் கலங்கிய படி நிற்கிறான்.
அப்படி நந்தினியின் தோழி சொன்னது என்ன..? நந்தினிக்கு என்ன ஆச்சு என்று அடுத்த கதையில் படிக்கலாம்..
-பவானி கார்த்திக்