வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை சரிவுடன் விற்பனையாகி வருகிறது.
சென்னையில் இன்று (27) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,600 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 44,800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 6,070 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 48,560 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 80 காசுகள் குறைந்து 77 ரூபாய்க்கும் கிலோவிற்கு 800 ரூபாய் குறைந்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
Discussion about this post