மண்ணச்சநல்லூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – 20க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் அடைந்தனர்.
இன்று காலை நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த ராமஜெயம் தனியார் பேருந்து வாத்தலை காவல் சரக்கத்திற்குட்பட்ட கிளியநல்லூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இழந்து சாலையில் இடதுபுறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 20க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வாத்தலை காவல் நிலைய ஆய்வாளர் விஜய் கோல்டன் சிங் விசாரணை நடத்தி வருகிறார். திருச்சி- முசிறி நெடுஞ்சாலையை பொருத்தவரை மிகவும் குறுகலான, அதிக இடங்களில் வளைவுகள் நிறைந்த சாலையாக இருப்பதால் இது போன்ற விபத்துக்கள் அதிகம் நேர்ந்து வருகிறது.
Discussion about this post