டங்ஸ்டன் திட்டம் நிறைவேற்ற விடமாட்டோம்..!! முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்..!!
திமுக அரசு உள்ள வரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் துறைகள் வாரியான மானியக் கோரிக்கை விவாதம் இன்று தொடங்கியது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம் குறித்த விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் இதை கடுமையாக எதிர்த்துள்ளதாகவும். மதுரை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு மட்டுமின்றி இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.
மேலும் தான் முதல்வராக உள்ளவரை இந்த திட்டத்தை நிறைவேற்ற மாட்டேன் என்றும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டால் தான் ராஜினாமா செய்ய தயார் என்றும் இந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..