“மனைவி வேண்டும்” – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவர்கள் போராட்டம்..!
ஆந்திர மாநிலம் ஏலூரைச் சேர்ந்த ராமானுஜ ஐயங்கார் என்பருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளை குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கும், இளைய மகளை விஜயவாடாவை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.
2 மகள்களும் தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 2 மகள்களும் கணவனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். இதனால் மருமகன் மீது ஆத்திரமடைந்த ராமனுஜன் இருவரையும் கணவர் வீட்டிற்கு அனுப்ப மறுத்துள்ளார்.
இதனால் 2 மருமகன்களும் தங்கள் மனைவிகளை சேர்ந்து வாழ அனுப்புமாறு மாமனாரிடம் பலமுறை கெஞ்சியுள்ளனர். ஆனால், தன் மகள்களை அனுப்ப முடியாது என திட்டவட்டமாக கூறியதால் வேறு வழியில்லாமல் மருமகன்கள் இருவரும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி, இருவரும் நேற்று ஏலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மனைவிகளை சேர்த்து வைக்க வேண்டும் என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”