ரயில் பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.. விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பரபரப்பு..!
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு மூன்று ஏர்கண்டிஷன் பெட்டிகள் எரிந்து கருகின.
குர்பாவில் இருந்து இன்று காலை விசாகப்பட்டினம் வந்து சேர்ந்த எக்ஸ்பிரஸ் ரயில் பதினோராவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
சற்று நேரத்தில் அந்த ரயில் திருப்பதிக்கு செல்ல இருந்த நிலையில் அதில் ஏறி பயணிப்பதற்காக பயணிகள் காத்திருந்தனர். அப்போது ரயிலின் எம்1, பி6, பி 7 ஆகிய பெட்டிகளில் இருந்து திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீ பெரும் தீவிபத்தாக மாறி மளமளவென எரிய துவங்கிய நிலையில் அவற்றிலிருந்து கரும்புகை வெளியேறி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனை கண்ட பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
தகவறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கடும் போரட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும் தீ மற்ற பெட்டிகளுக்கு பரவ வாய்ப்புகள் உள்ள காரணத்தால் மற்ற பெட்டிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பயணிகள் உரிய நேரத்தில் வெளியேறியதால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”