“அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போற தமிழன் கொடி..” தொடங்கிய மாநாடு…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் பேர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தற்போது தொடங்கியுள்ளது..
5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.. இன்று காலை முதல் மாநாடு திடலில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.. தற்போது வரை 5 லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் பங்கேற்றுள்ள நிலையையில்.
85 தொண்டர்கள் மயங்கியதால் அவர்களுக்கு மருத்துவசிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது..
தற்போது மாநாடுகள் தொடங்கிய நிலையில் அக்கட்சி தலைவர் விஜய் எப்போது வந்து பேசுவார் என தொண்டர்கள் பேர் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கும் நிலையில் தளபதியின் பாடல்கள் ஒளிபரப்பட்டது அது தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..
முன்னதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது ஒத்துழைப்பு கொடுத்து அனைவரும் அமைதியாக இருக்கும் படியும், கம்பிகள் மீது ஏறி ஆட்டம் போட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
இன்னும் சில நொடிகளில் தளபதி விஜய் பங்கேற்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..