வயநாடு நிலச்சரிவு..! ராகுல் காந்தி பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆறுதல்..!
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வயநாடு மலைப் பகுதியில் உள்ள சூரல் மலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் வீடுகளின் மேல் விழுந்துள்ளது.., மேலும் ஊருக்குள் மழை வெள்ளம் புகுந்ததில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது.
அந்த நிலச்சரிவில் பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 280க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இராணுவ வீரர்கள், மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல அமைப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண நிதி வழங்குமாறு கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலில் தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிவாரணா நிதி., மற்றும் அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 1கோடி என நிவாரணநிதியை வழங்கி இருந்தனர்.
அதனை தொடர்ந்து வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., மற்றும் பிரியங்கா காந்தி நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..