வயநாடு நிலச்சரிவு.. ஆட்கள் இல்லாத வீடுகளில் கைவரிசை காட்டும் மர்ம கும்பல்..!
கேரளாவில் கடந்த 30ம் தேதி பெய்த தொடர் கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிரமங்களான முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் பாறைகள், மண் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து வரப்பட்டன.மலைகளில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு என்பது முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதியை வேறொடு அழித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 365க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் சில பேரின் நிலமை என்னவென்றே தெரியவில்லை. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் வாழ்வதாரங்களை இழந்துள்ள சூழலில் வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
உயிருக்கு அஞ்சி அவசரம் அவசரமாக கிளம்பிய மக்கள் வீட்டில் இருந்த உடைமைகளை அப்படியே விட்டு விட்டு சென்றனர். இதனால் யாரும் இல்லாத அந்த வீடுகளில் திருட்டு கும்பல் கைவரிசை காட்டுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனைதொடர்ந்து, இப்படி பூட்டி கிடக்கும் வீடுகளை குறிவைத்து, கொள்ளை சம்பவம் அரங்கேறி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”