“தண்ணீர் வேஸ்ட் ஆயிடும்ல..” திருமணம் ஆன 40 நாளில் மனைவி எடுத்த முடிவு..!!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெண் ஒருவர் தன்னுடைய கணவர் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குளிப்பதாக கூறி விவாகரத்து கேட்டுள்ளார்..
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த வைஷாலி என்ற பெண்ணுக்கும் ராஜேஷ் என்பவருக்கும் திருமணம் ஆகி சில மாதங்களே ஆன நிலையில் தன்னுடைய கணவர் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குளிப்பதாக கூறி விவாகரத்து கேட்டுள்ளார்..
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், எங்களுக்கு திருமணம் ஆகி 40 நாட்கள் மட்டுமே ஆகிறது.., இந்த 40 நாளில் அவர் இரண்டு முறை தான் குளித்து இருப்பார்., நான் தினமும் அறிவுறுத்தியும் அவர் குளித்ததேயில்லை அவர் மீது தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதால் திருமணமான 40 நாட்களிலேயே அவரை விட்டு பிரிவதற்கு முடிவு செய்துள்ளேன்” என அந்த பெண் புகார் அளித்துள்ளார்..
வாரத்திற்கு ஒருமுறை ராஜேஷ் கங்கை நதியில் இருந்து வரும் நீரை தலையில் தெளித்துக்கொண்டு குளிக்காமல் இருந்துள்ளார்., புதுமனைவியின் வற்புறுத்தலால் திருமணமான 40 நாட்களில் 6 முறை மட்டுமே குளித்ததாக சொல்லப்படுகிறது.. இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்..
இதனால் ராஜேஷ் வீட்டாருக்கும் வைஷாலி வீட்டினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண் தனது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறியுள்ளார். பின்னர் இருவரும் ஆலோசனை மையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..