உங்கள் சருமம் அழகாக வேண்டுமா? நடிகை சமந்தா சொன்ன அந்த ரகசியம்..?
சின்னத்திரை, வெள்ளித்திரை என, சினிமாத்துறையை சேர்ந்த எந்த நட்சித்திரமாக இருந்தாலும் என்றும் அழகாக தான் தோற்றம் அளிப்பார்கள்.
அதிலும் ஷூட்டிங்கிற்காக வெளியூர், வெளிநாடு எல்லாம் செல்ல வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் அவர்களின் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படும். அதை பராமரிக்க அவர்கள் பல சரும குறிப்புகளை பின் பற்றுவார்கள்.
பொதுவாக சில சின்னத்திரை நடிகைகள், அவர்களின் முகத்தில் போடப்படும் மேக்கப் பற்றிய வீடியோக்களை வெளியிடுவார்கள். இல்லையேல் அதற்கான சில டிப்ஸ் கொடுப்பார்கள்.
அப்படி தான் நம் சமந்தாவும், அவரின் சருமம் எந்த வித மேக்கப் இன்றியும் எப்பொழுதும் அழகான தோற்றத்தில் இருக்கும்.
உங்களின் சருமம் மட்டும் இப்படி அழகாக இருக்கிறது. என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில், என் முகம் மற்றும் தலை முடியை பாதுகாப்பதில் நான் அதிக கவனம் செலுத்துவேன். எனது சருமத்தை பராமரிக்க நான் எந்த வித, சோப்பும், கிரிமும் நான் பயன் படுத்தவில்லை.
தினமும் காலையில் ஒரு கிளாஸ் கொலாஜன் பானத்தை தான் குடிப்பேன்.
கொலாஜன் என்பது ஒரு வித புரதச்சத்து, இதை சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, ஹைட்ரேட்டாக வைத்திருக்கும். மேலும் கடினமான சருமத்தை, மென்மையாக மாற்றும்.
கொலாஜன் நம் உடலில் 25% முதல் 35% வரை இருக்கும். சருமதோற்றதை கொடுத்து, இளமையை பாதுகாக்கும் முகத்தில் விரைவில் சுருக்கம் வராமல் பார்த்துக்கொள்ளும்.
கொலாஜன் மாத்திரை, கொலாஜன் பவுடர் என பல உள்ளது. நான்அதில் தினமும் கொலாஜன் பவுடரை தண்ணீரில் கலந்து குடிக்கிறேன். அதனால் தான் என் சருமம் என்றும் பொலிவுடன் இருக்கின்றது. என சமந்தா கூறினார்.
Discussion about this post