காலையில் உறக்கத்தில் இருந்து சீக்கிரம் விழிக்க..! சில டிப்ஸ்
இரவு உறங்க செல்லும் பொழுது மறுநாள் அதிகாலை சீக்கிரம் எழ வேண்டும். என்ற சிந்தனை அனைவருக்கும் இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் தான் எழுந்த கொள்ள முடியாமல் தூங்க தோன்றும்.
ஆனால் ஒரு சிலர் அலாரம் இல்லாமலே தூக்கத்தில் இருந்து எழுந்து விடுவார்கள் அது எப்படி..? அதற்க்காக தான் சில டிப்ஸ்
அதிகாலையில் எழுவது உடலுக்கு ஆரோக்கியமான ஒன்று, அதிகாலையிலே சீக்கிரம் எழுந்துக் கொள்ள வேண்டும். என்ற சிந்தனையை முதலில் நம் மூளைக்கு கொண்டுச்செல்ல வேண்டும்.
காரணம் மூளைக்கு நாம் கொண்டு சென்ற பின் அதன் சிந்தனை முழுவதும் காலையில் சீக்கிரம் எழுந்த கொள்ள வேண்டும் என்ற மட்டும் தான் இருக்கும்.
இதனால் ஹார்மோன் சுருக்கப்பட்டு அலாரம் அடிப்பதற்கு முன்னரே எழுப்பி விடும்.
நிர்பந்தத்தோடு படுக்கும் நபர்களுக்கு, ஹார்மோன் சுரந்து மனதுக்குள் ஒரு வித அழுத்தத்தை ஏற்படுத்தும். எந்த வித நிர்பந்தம் இல்லாமல் உறங்க சென்றால், ஹார்மோன்கள் சுரக்காது என்பது ஆய்வியல் பூர்வமாக நிரூபணம் செய்யப் பட்டுள்ளது.
நீங்கள் இருக்கும் அறையில் சூரிய வெளிச்சம் படும்படி இருந்தால் சீக்கிரமே எழுந்து கொள்ள முடியும். சூரியனின் வெளிச்சம் அறைக்குள் வரும் பொழுது அதன் வெளிச்சம் கண்களில் படும் பொழுது, தூக்கம் கலைந்து விடும்.
தினமும் தூக்கத்திலிருந்து நாம், எழும் நேரம் ஒரே நேரமாக இருக்க வேண்டும். அதாவது 10 மணிக்கு செல்லும் அலுவலகத்திற்கு 8 மணிக்கு எழுவது தவறு. தினமும் காலை 6 மணிக்கு எழுந்து, சூரியனை பார்க்க வேண்டும்.
தினமும் இரவு நன்கு காற்று வசதியாக உள்ள இடத்தில் படுத்து உறங்க வேண்டும். அப்போது தான் இரவு நன்றாக உறக்கம் வரும் காலையில் சீக்கிரம் தூக்கத்தில் இருந்து விழிக்கவும் முடியும்.