வாக்குப்பதிவு விவரங்கள் 17சி படிவம்..! உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு..?
மக்களவைத் தேர்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவும் நிறைவு பெற்றதும் 48 மணி நேரத்துக்குள் வாக்குச் சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் பதிலளித்திருந்த தேர்தல் அணையம், முதல்கட்டமாக வெளியிடப்படும் வாக்குப்பதிவு விவரங்களும், இரண்டாம் கட்டமாக தபால் வாக்குகளுடனும் சேர்த்து வெளியிடப்படும் விவரங்களும் வேறுபடும் என்றும், இத்தகைய சூழலில் படிவம் 17சி பொதுவெளியில் வெளியிட்டல் மக்களிடையே குழப்பம் ஏற்படும் என தெரிவித்தது.
அதுபோல, வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய படிவம் 17 சி-ஐ பதிவேற்றம் செய்வது சட்டப்படி கட்டாயம் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பதிவான வாக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய படிவம் 17-ஐ, 48 மணி நேரத்துக்குள் வாக்குச் சாவடி வாரியாக வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், பதிவான வாக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட 17சி படிவம் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
– லோகேஸ்வரி.வெ