மீண்டும் அஜித்துடன் ஜோடி சேரும் நயன்தாரா..!! நயன்தாரா கேட்ட சம்பளம்..!! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்..!
லேடி சூப்பர் ஸ்டார் என மக்களால் அழைக்கப்படும் நயன்தாரா ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பல முன்னனி நடிகர்களுடன் நடித்த இவர் தற்போது பெண்களை மையமாக கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
கோலிவுட்டின் டாப் நடிகையான நயந்தாரா தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழியிலும் நடித்து வருகிறார். ஹிந்தியில் அவர் நடித்த ஜவான் படம் மெகா ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நானும் ரொடி தான். இந்த திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவருக்கும் காதல் தொடங்கியது. பல வருடங்களாக தொடர்ந்த காதல் கடந்த ஆண்டில் திருமணமானது. தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
எடுத்துக்காட்டாய் விளங்கும் நயன்தாரா :
டாப் நடிகைகளாக இருந்தாலும் திருமணமான பிறகு குடும்ப வாழ்க்கையை கவனிக்க தொடங்கிவிடுகிறார்கள். அதையெல்லாம் உடைத்து எறிந்த நயன்தாரா திருமணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என தற்கால நடிகைகளுக்கு எடுத்துகாட்டாய் திகழ்ந்து வருகிறார்.
நயன் நடிக்கும் திரைப்படங்கள் :
நயன்தாராவின் 75வது திரைப்படமாக வெளிவந்த அன்னப்பூரணி திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனை தொடர்ந்து மண்ணாங்கட்டி திரைப்படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக அஜித் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைய நிலையில் அஜித் அடுத்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு இதன் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. அஜித் 3வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீலீலாவை தொடர்ந்து நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் அதற்காக தனது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
ஏகன், பில்லா, விஷ்வாசம், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த இவர்கள் அதன்பின் நடிப்பதை நிறுத்திவிட்டனர். இதற்கு காரணம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் இணைவதாக இருந்த படம் ட்ராப்பானதால் அஜித் மீது நயன்தாரா வருத்தத்தில் இருப்பதாக செய்தி பரவி வந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நயன்தாரா இணைந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படத்தில் நயன்தாரா நடிப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இந்தப் படத்துக்காக அவர் 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார். என்றும் புதிய தகவல் ஒன்று ஓடுகிறது. இதை கேட்ட ரசிகர்களும், திரைத்துறையினரும் என்னது 10 கோடி ரூபாய் சம்பளமா என்று ஷாக் ஆகி உள்ளனர்.
– பவானி கார்த்திக்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..