மணிப்பூரில் நீடிக்கும் வன்முறை..! பெண் அமைச்சர் வீட்டில் பற்றி எரியும் தீ..!!
மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஆளுங்கட்சி பெண் அமைச்சர் வீட்டிற்கு வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளனர். தீ வைத்து பரபரப்பை ஏற்படுத்திய மர்ம கும்பலை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை 115பேர் உயிர் இழந்துள்ளனர், மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் பெரும்பான்மையோராக மெய்டி சமூகத்தினரும், பட்டியலின பழங்குடியினருக்கு அந்தஸ்து கொடுப்பதை எதிர்த்து, கூகி பழங்குடியினர் அமைப்புகள் பேரணி நடத்தியுள்ளனர் அதில் பல வன்முறைகள் வெடித்துள்ளது.
இந்த வன்முறையில் ஏராளமான வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக இங்கு வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் 9பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 10பேர் காயம் அடைந்துள்ளனர்.
எனவே இதை தடுத்து மீண்டும் அமைதியான மாநிலத்தை உருவாக்க.., அம்மாநில மத்திய அரசு ஒரு அமைதிக் குழுவை உருவாக்கியது.. ஆனால் அன்று இரவே குகி சமூக பெண் அமைச்சர் வீட்டிற்கு மர்ம கும்பல் தீ வைத்துள்ளனர்.
வீட்டில் யாரும் இல்லாததால், எந்த உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. வீட்டிற்கு தீ வைத்த மர்ம கும்பலை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுவரை நடந்த கலவரத்தில் 115பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 310 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 4000 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ.க்கு மாற்றப் பட்டுள்ளது.
Discussion about this post