விழுப்புரம் இரயில் விபத்து…!! மீட்பு பணி தீவிரம்..!!
பொங்கல் பண்டிகையையொட்டி பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 6 லட்சம் பேர் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அதேப்போல் இரயிலில் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி சென்ற யூனிட் ரெயில் விழுப்புரம் இரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இருந்த நிலையில் 6-வது பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் இரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட பெட்டியை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து காரணமாக சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் இரயில், விழுப்புரம் இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் இழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..