சபரிமலையில் மகரவிளக்கு பூஜை…!! 18ம் படி ஏற அனுமதி இல்லை…!!
சபரிமலையில் மகரவிளக்கு பூஜையாயொட்டி ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கேரளாவில் உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மகர விளக்கு பூஜையையொட்டி 1 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் மகரஜோதியை முன்னிட்டு நெரிசல் ஏற்படாமல் இருக்க பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது உச்சிகால பூஜை முடிந்து நடை சாத்தப்பட்ட பின்னர் 18ம் படி ஏற அனுமதி இல்லை என்றும் திருவாபரணம் சரங்குத்தியை அடைந்த பின்னரே பக்தர்கள் சாமி தரசிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..