குடிநீர் வழங்காத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்..!!
வேலூர் மாவட்டம் பரதராமி அடுத்த பூசாரி வலசை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு முறையாக சுமார் ஒரு மாதம் காலமாக குடிநீர் வருவதில்லை எனவும் இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் கேசவலு என்பவரிடம் பூசாரி வாசை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து பலமுறை கேட்டதற்கு சரியான பதில் சொல்லாதல் இன்று பரதராமிலிருந்து லத்தேரி செல்லும் சாலையில் கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காவல் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினால் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஈடுபட்ட பொதுமக்களிடம் உடனடியாக குடிநீர் பிரச்சனையை சரிசெய்து தருவதாக உறுதி அளித்த பின் சாலை மறியலை கைவிட்டனர்.
சாலை மறியலின் போது சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அரசு பேருந்துகள் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குடிநீர் வழங்காத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..