வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.. காண கண் கோடி வேண்டும்..!!
வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து மகாதீபாராதனைகள் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு
நந்தி பகவானுக்கு பால், தயிர் ,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பூ மாலைகள், அருகம்புல் வில்வ இலைகளை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகா தீபாராதனைகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
நந்தி பகவானின் பூஜைகள் மற்றும் அபிஷேகத்தை பார்பவர்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும்.., முக்கியமாக இந்த நாளில் நந்திக்கு பூஜை செய்தால் சிவபெருமானின் ஆசி கிடைக்கும், மேலும் நினைத்த செயல் நடக்கும் என்பது ஐதீகம்.
Discussion about this post