விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! பெண்ணுக்கு கத்திக்குத்து..! பரபரப்பான அந்த வாக்கு சாவடி..!
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த மாவட்டத்திற்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்காளர்கள் :
காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த தொகுதியில் இடைத்தேர்தலில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அதற்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 1500 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுதப்பட்டுள்ளனர். ஆளும் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7மணிக்கு தொடங்கப்பட்ட வாக்குபதிவில் தற்போதைய நிலவரப்படி 12மணி நிலவரப்படி 29.95% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி பால் விநியோகம் மற்றும் மருந்து கடைகளை தவிர பிற கடைகளை காவல்துறையினர் மூடச் சொன்னதால் காணை பகுதியில் தேர்தலை புறக்கணித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி 6மணிக்கு மேல் கடைய திறக்க அனுமதித்த பின்னரே வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து :
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் டி .கொசப்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த கனிமொழி (வயது 49) என்ற பெண்ணை அடையாளம் தெரியாத மர்ம நபர் கத்தியில் குத்தி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவனையில் சேர்த்தனர்.. இதனால் அப்பகுதியில் சுமார் 1மணிநேரம் வாக்கு நிறுத்தப்பட்டது.. வாக்களிக்க வந்த பெண்ணிற்கு கத்திக்குத்து நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..