விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! திமுக வேட்பாளராக களம் இறங்கும் அன்னியூர் சிவா..! யார் இவர்..?
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் நான்கு நாட்களே இருப்பதால். வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திமுகவின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் என்பது குறிப்பிடதக்கது.
இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனையின் முடிவில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணம் :
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல் நலக்குறைவால் கடந்த மாதம் ஏப்ரல் மாதம் 6ம் தேதி காலமானார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். அதன் அடிப்டையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன் படி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் எனவும், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடையும் எனவும் அறிவித்திருந்தது.
மேலும், மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறவுள்ளது. மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 -ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு ஜூலை 10 -ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..