”மாற்று திறனாளிகளுக்கான பள்ளிகள் வேண்டும்”…டாட்ஸ் பள்ளி பிரின்ஸ்பல் கோரிக்கை..!
கோவை காந்திபுரம் அடுத்த காட்டூர் காளிஸ்வரா நகர் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுகளாக டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் ஸ்பெஷல்ஸ் கூல் எனும் டாட்ஸ் பள்ளி இயங்கி வருகின்றது.
இப்பள்ளியில் பயிலும் மாற்று திறனாளிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் இன்று பள்ளி வளாகத்தில் மாற்றுத் திறனாளி களுக்கான பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் மாற்று திறனாளி குழந்தைகள், வடிவமைத்த பல்வேறு பொருட்கள் அடங்கிய கண்காட்சியை காட்சி படுத்தியிருந்தனர்.
இவற்றை கண்டு ரசித்த ஆணையர், அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களின் படிப்புக்காக கல்வி உபகரணங்களை வழங்கினார். இதனை தொடர்த்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இப்பள்ளியின் பிரின்ஸ்பல் டாக்டர் ஜெயபிரபா கூறும் பொழுது…
கடந்த ஆண்டு இதே நாளில் 2 குழந்தைகளுடன் துவங்கபட்ட இந்த பள்ளியில் தற்போது 32 குழந்தைகள் உள்ளனர். மாநகராட்சியின் இடத்தில் இப்பள்ளியை நடத்தி வருகின்றதாகவும், இங்கு வாய் பேச முடியாத, நடக்க முடியாத, கை, கால் அசைக்க முடியாத என பல குழந்தைகளுக்குக் இலவசமாக கல்வி, மற்றும் அவர்களின் வாழ்க்கையை மாற்ற பல்வேறு விளையாட்டுக்களையும் கற்று தருகின்றோம்.
இன்று இக்குழந்தைகள் இயற்கை காற்றை சுவாசித்து விளையாடும் வகையில் பூங்கா அமைக்க பட்டுள்ளது இது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்றார்.
மேலும் இது மாதிரியான ஸ்பெஷல் குழந்தைகளை கவனிக்கவும் அவர்களுக்கு கல்வியை கற்று தறும் இது மாதிரியான பள்ளிகளை திறந்து நடத்த முன்வர வேண்டும்,
அப்பொழுது தான் இது மாதிரியான மாற்று திறனாளிகள் குழந்தைகளின் எதிர்காலம் நல்ல நிலைக்கு வரும். எனவே அரசு இது மாதிரியான பள்ளிகளை நடத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுப்பதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர், ஆச்சி பட்டி பஞ்சாயத்து கவுன்சிலர்சுரேஷ்குமார், 324 டிலயன்ஸ்க்ளப் இன்டர்நேஷனல் மாவட்ட ஆளுநர் மோகன் குமார், கலிபோர்னியாவை சேர்ந்த காசி விஸ்வநாதன், மற்றும் உதயகுமார், பையாஸ்அமானுல்லா, மருத்துவர் சரண், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்