”தலைமையாசியர் திட்டியதால் விஷம்” அருந்தி மாணவன் தற்கொலை…!
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்த காந்தி என்பவரின் மகன் யுவராஜா ( 14) என்ற பள்ளி மாணவன். காந்தி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு யுவராஜா தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று யுவராஜாவை தலைமை ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த யுவராஜா நேற்று விஷம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதனைப் பார்த்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் யுவராஜாவை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பள்ளி மாணவன் யுவராஜாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனின் பெற்றோர் மற்றும் பள்ளியிலும் பள்ளியிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானிகார்த்திக்