சீமான் குறித்து விஜய் பதிவு..!!
தமிழ் திரை உலகின் நடிகரும் இயக்குனரும் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் அவர்களின் பிறந்தநாள் இன்று..
அவர்களின் பிறந்தநாளில் அவர்களது கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிக்கருமான தளபதி விஜய் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது..
தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்..
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாட்டில் அவர் பேசிய அரசியல் பேச்சுக்கு சீமான் விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது…