சிவகார்த்திகேயன் 23…! வெளியான அடுத்த அப்டேட்…!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!
ரியாலிட்டி ஷோக்களின் மூலம் சின்னத்திரையில் ஒரு போட்டியாளராக பங்கேற்று அதன் பின்னர்., அது இது எது என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து இயக்குநர் பாண்டிராஜ் அவர்களால் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். கடந்த 2012 ஆம் ஆண்டு மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனுஷின் 3 படத்தில் ஹீரோவிற்கு நண்பனாக நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன்.
எதிர்நீச்சல்., வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே போன்ற படங்களில் நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து பல வெற்றிப்டங்களை கொடுக்க ஆரம்பித்தார்.. மேலும் பாடல் பாடுவது, எழுதுவது, படம் தயாரிப்பது போன்றவற்றையும் செய்ய ஆரம்பித்தார்.
தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது., இதுவரையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் இப்படம் முதல் சாதனை படம் என சொல்லலாம்..
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் 23 வது படத்தை இயக்கி வரும் ஏ.ஆர் முருகதாஸ் அந்த படத்தை வேகமாக முடித்து 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார். அதனால் சல்மான்கான் நடிப்பில் சிக்கந்தர் படத்தையும் தற்போது இயக்கி வரும் முருகதாஸ் அதற்கு முன்னதாகவே சிவகார்த்திகேயன் 23 வது படத்தை திரைக்கு கொண்டு வரும் வேலைகளில் தீவிரமடைந்துள்ளார்.
மேலும் இந்த படத்தை தொடர்ந்து சுபிச்சக்கரவர்த்தி சுதா கொங்கரா ஆகியோரின் படங்களிலும் அடுத்த ஆண்டுக்குள் நடித்த முடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்