நடிகர் அஜித் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்தது இதையடுத்து துணிவு படம் பொங்கலுக்கு வர வாய்ப்புள்ளது என்று சினிமா துறையினர் கூறிவந்தனர். இந்நிலையில், படத்தின் கிராபிக்ஸ் மாற்றம் டப்பிங் வேலைகள் நிறைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடியமா என்று இயக்குனர் வினோத் குழப்பத்தில் இருக்கிறாராம்.
வாரிசு மற்றும் துணி படங்களை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வார்கள் என்ற எதிர் பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள் தற்போது இருந்தே கொண்டாட தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தீபாவளியன்று வாரிசின் போஸ்டர் வெளியாகி மீண்டும் பொங்கல் ரிலீஸை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் துணிவு படம் தள்ளிபோக வாய்ப்புள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையில் குழப்பம் அதிகரித்துள்ளது.
மேலும் துணிவு படத்தை முடித்த அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அதன்பிறகு நடிகர் அஜித் நடிப்பில் இருந்து 2 ஆண்டுகள் ஒதுங்கவுள்ளதாகவும் அந்த இடைவேளியில் உலக சுற்று பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.