கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம்… கமல்ஹாசனுக்கு வழங்கிய முதல்வர்…!
முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டை கொண்டாடி வரும் தமிழக அரசு, அவரது நினைவாக சிறப்பு நாணயம் வெளியிடுவதற்காக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிடுவதற்கு ஒப்புதல் அளித்தது.
அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் சமிபத்தில் நடைப்பெற்றது. அந்த விழாவில் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வழங்கினார்.
இதுதொடர்பான புகைப்படங்களை கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.
நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன்.
மேலும் அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”