நடிகர் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்துள்ளார். இந்த ரசிகர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஏற்பட்ட இந்த தொடர் சந்திப்பு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் வரும் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படத்துடன் வெளியாகவுள்ளது. இதனால் இந்த இரு படங்களும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் தனது இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார்.
பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் கடந்த மாதம் ரசிகர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்தார் அதை தொடர்ந்து இந்த மாதமும் சந்திப்பு நடத்தியுள்ளது பேசுபொருளாக உருவாகியுள்ளது. ஏற்கனவே சினிமாவில் அஜித்,விஜய் இருவருக்கும் பெரும் போட்டி இருந்து வரும் நிலையில் ஒரே பண்டிகை நாளில் இவர்களின் படங்களும் வெளியாகவுள்ளதால் இரு தரப்பினரிடமும் சற்று எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படும் நிலையில், விஜய்க்கும் உதயநிதிக்கு இருக்கும் கருத்து வேறுபாட்டால் விஜய் படமான வாரிசு படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை குறைவாகவே கிடைக்கும் என்று பேசப்படுகிறது. நடிகர் விஜய்க்கு சினிமா ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பெரும் சிக்கல் இருப்பதால் வாரிசு படம் வென்றே ஆக வேண்டும் என்றுதான் அவர் தனது இயக்க நிர்வாகிகளை சந்தித்து அறிவுரை அளித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இது இயல்பான சந்திப்பே என்று விஜயின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துவருகின்றனர். ஆனால் நடிகர் விஜய் தற்போது இக்கட்டான சூழலில் இருப்பதால் தான் அவர் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வருகிறார் என்று பலர் கூடிவருகின்றனர்.
மேலும் பனையூரில் நடந்த சந்திப்பில், அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படகாகவும் , மக்கள் இயக்க செளபாடுகள் குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ந்த சந்திப்பின் பிறகு நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் அது தற்போது வேலையாகி வைரலாகி வருகிறது.