சென்னை கிண்டியிலுள்ள ராஜபவனில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தோகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்த விழாவில் முதல்வர், ஆளுநர் உட்பட தமிழகத்தின் 35 அமைச்சர்களும் பங்கேற்றனர்.
திமுகவின் இளைஞரணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக முதலவர் ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தார். அந்த பரிந்துரைக்கு அனுமதி வழங்கிதை தொடர்ந்து இன்று சென்னையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி ஏற்பு விழா நடந்தது. உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இளைஞர் நலன் துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சராக பதவியேற்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் என்பதை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
மேலும் பதவியேற்ற பின் ஆளுநரிடம் பூக்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் பெற்றார். பின்னர் அமைச்சரான பின் தந்தையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். பதவியேற்பு விழாவின் இறுதில் செய்தியாளரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய செயல்கள் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பேன் என்றும் தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகரமாக ஆக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள், திமுக நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.