சென்னை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

நடிகர் விஜய்யின் ஆணைக்கினங்க தொடங்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு நலத் திட்டங்களையும் சமூக பணிகளையும் செய்து வருகிறது. குறிப்பாக பாடசாலை திட்டம், பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகைகள் மற்றும் விருதுகள் வழங்குவது என தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. மேலும் அடிக்கடி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் இன்று சென்னை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக்கூட்டம் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர். நடிகர் விஜய், மகளிர் அணியை சிறப்பாக கட்டமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பங்கேற்ற தாய்மார்களுக்காக பாலூட்டும் அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நிர்வாகிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

















