பிரதமர் மோடி முன் வைக்கப்படிருந்த பெயர் பலகையால் சர்ச்சை..!!
இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
அதேபோல், தொழில்நுட்ப முன்னேற்றம், உட்கட்டமைப்பு, மனிதவளம் போன்றவற்றை சர்வதேச நாடுகள் அறிந்து கொள்ள இது மிகச்சிறந்த நல்வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை தந்து வரும் நிலையில், அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். அதிபர் ஜோ பைடன், சர்வதேச நாணய நிதிய தலைவி கிறிஸ்டலினா ஜார்ஜிவா, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா உள்ளிட்ட தலைவர்கள் வருகை பாரத் மண்டபத்திற்கு வருகை தந்த நிலையில், அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். அதேபோல், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்று வருகிறார்.
ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உலக தலைவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, 21 ஆம் நூற்றாண்டில் உலகிற்கு புதிய திசையை காட்டுவதற்கான முக்கிய நேரம் இது என குறிப்பிட்டார்.
வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான பிளவு, கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான தூரம், உணவு மற்றும் எரிபொருள் மேலாண்மை, பயங்கரவாதம், சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் உறுதியான தீர்வைக் காண வேண்டும் என கூறினார்.
ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைக்கப்படுவதாக ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார். ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரானது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி ஆப்பிரிக்க யூனியன் தலைவரை முறைப்படி அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தார்.
இதற்கிடையே, ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட உலக நாடுகளின் தலைவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன்பு அந்த நாடுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பிரதமர் மோடி அமர்ந்துள்ள இருக்கையின் முன்பு இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய ஒன்றிய அரசு முயன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Discussion about this post