கடந்த செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று 100வது நாளை எட்டியுள்ளது. மேலும் இந்த யாத்திரையில் இன்று புதிதாக பதவியேற்ற இமாச்சல முதல்வர் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு பங்கிராகவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன் கன்னியாகுமரியில் முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை பயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.கன்னியாகுமரி தொடங்கி காஸ்மீர் வரையிலான இந்த பயணம் காங்கிரஸ் கட்சினரிடையே மட்டுமின்றி அணைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. ராகுல் காந்தி செல்லும் நடைபயணம் முழுவதும் அவரை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வரவேற்பு தந்த வண்ணம் உள்ளனர்.
இந்திய ஒற்றுமை யாத்திரை தமிழகம் தொடங்கி கேரளா, கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிறைவடைந்து தற்போது யாத்திரை ராஜஸ்தான் மாநிலத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் இன்றோடு 100வது நாளை எட்டியுள்ள இந்த நடைபயண யாத்திரையில் , ராஜஸ்தானில் இன்று நடைபெறும் யாத்திரையில் ராகுல் காந்தியுடன் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி மற்றும் எம்எல்ஏ.,க்கள் பங்கேற்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் நடந்த தேர்தலின் வெற்றி அந்த கட்சிக்கு மிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.