பீகார் மாநிலம் பாட்னா அருகேயுள்ள கொரியா பஞ்சாயத்து வித்யாலயா பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பள்ளியில் ஆசிரியைகளுக்குள் நடந்த அடிதடி வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த பள்ளியில் தலைமையாசிரியராக உள்ள காந்தி குமாரி, அங்கு பணிபுரியும் ஆசிரியையான அனிதா குமாரி என்பவரை பள்ளி வகுப்பறை ஜன்னல்களை மூடும் படி கூறியுள்ளார். இதைச் செய்ய அனிதா குமாரி மறுத்ததாக தெரிகிறது. இதனால் தலைமையாசிரியருக்கும், சக ஆசிரியைகள் இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் வெடித்துள்ளது.
இதில் இருதரப்பாக பிரிந்து ஆசிரியைகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அப்போது அங்கிருந்து வெளியேறிய தலைமையாசிரியை வழிமறித்த ஆசிரியைகள் அவரது முடியை பிடித்து இழுத்து அருகே இருந்த வயலுக்குள் தள்ளியுள்ளனர். முதுகில் கும்மாங் குத்து விட்டதோடு, வயலில் கட்டிப்பிடித்து புரள ஆரம்பித்தனர். மாணவர்கள் முன்பு ஆசிரியைகள் இவ்வாறு கேவலமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#patna #bihar #teacher #bihta #school #fight #bihareducation #stet #Trending #Trendingtopic #trendingvideo pic.twitter.com/Wh2bHtQv3b
— 𝑨𝑺𝑯𝑰𝑺𝑯 𝑲𝑹. 𝑺𝑰𝑵𝑮𝑯 🇮🇳 (@Ashish9singh) May 26, 2023
Discussion about this post